தமிழகத்தில் களத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் முகக்கவசம், கையுறை வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு மதுரைகிளை உத்தரவு


தமிழகத்தில் களத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் முகக்கவசம், கையுறை வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு மதுரைகிளை உத்தரவு
x
தினத்தந்தி 26 Jun 2020 10:32 AM GMT (Updated: 26 Jun 2020 10:32 AM GMT)

தமிழகத்தில் களத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் முகக்கவசம், கையுறை வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவர்கள், காவலர்கள், செவிலியர்கள் மிகவும் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். 

இருப்பினும் கொரோனா பாதிப்பு மருத்துவர்கள், காவலர்கள், செவிலியர்கள் பணியிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தினந்தோறும் காவலர்கள் கொரோனாவால் பாதிப்படைகின்றனர். 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவி வரும் சூழலில் களத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் முகக்கவசம், கையுறை வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை காவல்துறை கண்காணிப்பாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Next Story