மாநில செய்திகள்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரணம் + "||" + To the family of Jayaraj who died in saththankulam On behalf of the AIADMK Rs. 25 lakh relief

சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரணம்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரணம்
சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மரணமடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்த நிகழ்வு துரதிருஷ்டவசமானது,மிகவும் வேதனைக்குரியதுமாகும்.

இத்தகைய வேதனை அளிக்கும் சம்பவங்களை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என்றும் குடும்பத்தின் இரண்டு தூண்களாய் இருந்த தந்தை மகனையும் இழந்து வாடும் அக்குடும்பத்தினருக்கும் அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ,அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறது.

மேலும் உயிரிழந்த ஜெயராஜின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.