மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை ஒரே மாதத்தில் 21 வது முறையாக உயர்வு + "||" + Petrol and diesel prices rise for the 21st time in a single month

பெட்ரோல், டீசல் விலை ஒரே மாதத்தில் 21 வது முறையாக உயர்வு

பெட்ரோல், டீசல் விலை ஒரே மாதத்தில் 21 வது முறையாக உயர்வு
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ஒரே மாதத்தில் 21ஆவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை

ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 7-ம் தேதி முதல் இந்த மாதத்தில் மட்டும் 21 முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து 83 ரூபாய் 59 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, டீசல் விலை லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 61 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.