மாநில செய்திகள்

சென்னை உட்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + In 17 districts including Chennai Opportunity for rain Chennai Meteorological Center Information

சென்னை உட்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை உட்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ,கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி,கோவை, நீலகிரி, நாமக்கல், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் காரைக்கால் தஞ்சாவூர் திருவாரூர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.