மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு; உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி, மருந்துகளை கொள்முதல் செய்ய முதல் அமைச்சர் உத்தரவு + "||" + Corona damage; CM orders purchase of high cost injections and medicines

கொரோனா பாதிப்பு; உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி, மருந்துகளை கொள்முதல் செய்ய முதல் அமைச்சர் உத்தரவு

கொரோனா பாதிப்பு; உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி, மருந்துகளை கொள்முதல் செய்ய முதல் அமைச்சர் உத்தரவு
கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி, மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நேற்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.  இதனால் தொடர்ந்து 2வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கு கூடுதலாக சென்றது.

இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரை காப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமுடன் எடுத்து வருகிறது.  இந்நிலையில், தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்பொழுது, கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக, உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி, மருந்துகளை கொள்முதல் செய்யும்படி முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இதன்படி, ரெம்டெசிவிர் உள்ளிட்ட விலை உயர்ந்த மருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.  அவற்றை, மருத்துவ பணிகள் சேவை கழகம் மூலம் உடனடியாக கொள்முதல் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  இதுவரை பாதி மருந்துகள் வந்த நிலையில் மீதி மருந்துகள் ஓரிரு நாட்களில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அவதிப்படும் நிலையில், பணத்தை பெற்றுக்கொண்டு இ-பாஸ் வழங்கும் அரசு அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
2. படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் ஐகோர்ட்டு உத்தரவு
65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள விதிக்கப்பட்டு இருந்த தடை மும்பை ஐகோர்ட்டு உத்தரவால் நீக்கப்பட்டுள்ளது.
3. போதை மறுவாழ்வு மையம் அருகே பாருடன் கூடிய மதுக்கடை; மூடும்படி நீதிபதிகள் உத்தரவு
தேனியில் போதை மறுவாழ்வு மையம் அருகே அமைந்த மதுக்கடையை உடனடியாக மூடும்படி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர்.
4. வருகிற 10-ந் தேதி முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி எடப்பாடி பழனிசாமி உத்தரவு
தமிழகம் முழுவதும் 10-ந் தேதியில் இருந்து தனியார் உடற்பயிற்சி கூடங்கள் இயங்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
5. ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு எப்படி முட்டை வழங்குவது? அரசு முடிவு செய்ய, ஐகோர்ட்டு உத்தரவு
மாணவர்களுக்கு எப்படி முட்டை வழங்குவது என்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.