தென்காசியில் போலீஸ் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு? ஊர் மக்கள் போராட்டம்


தென்காசியில் போலீஸ் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு? ஊர் மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2020 2:54 AM GMT (Updated: 28 Jun 2020 2:54 AM GMT)

தென்காசியில் போலீஸ் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்ததாக உறிவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள வீரகேரளம்புதூர் காவல் காவல்நிலையத்தில் விசாரணையின் போது ஆட்டோ ஓட்டுநர் குமரேசனை போலீசார் தாக்கியதாக காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளிடம் குமரேசனின் தந்தை ஏற்கனவே புகார் அளித்து இருந்தார்.

இந்தநிலையில் போலீஸ் தாக்குதலில் பலத்த காயமடைந்த குமரேசன் ஜூன் 12 அன்று நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் குமரேசனின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரின் ஊர் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை-மகனான வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story