முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு கொரோனாவை விரட்டி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு கொரோனாவை விரட்டி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Jun 2020 10:35 AM GMT (Updated: 28 Jun 2020 10:35 AM GMT)

முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு கொரோனாவை விரட்டி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், மருத்துவம், பொருளாதாரம் சார்ந்த பாதிப்புகளைக் கடந்து இப்போது புதிய பாதிப்புகளையும் ஏற்படுத்தத் தொடங்கி உள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்குதலும், கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் மிகப்பெரிய அளவில் மனநலம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

ஊரடங்கு நடைமுறை படுத்தப்பட்ட மார்ச் 24-ந் தேதி முதல் கடந்த மே 31-ந் தேதி வரை குடும்ப வன்முறை புகார்கள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. இன்றைய சூழலில் மக்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியல் வல்லுனர்களைக் கொண்டு அனைத்து வகை ஊடகங்கள் மூலமாக தீர்வுகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் ஆகியவற்றின் மூலம் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வூட்டிக் கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் மேலாக கொரோனா குறித்த தேவையற்ற அச்சங்களை விலக்கி, அரசின் வழிகாட்டுதல்படி முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதன்மூலம் கொரோனாவையும், மன அழுத்தத்தையும் விரட்டி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story