மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாளை காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு + "||" + Petrol & Diesel condemn the hike Congressmen to protest tomorrow KS Alagiri Announcement

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாளை காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாளை காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாளை காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
சென்னை,

இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. 21வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் டீசல் விலை பெட்ரோல் விலையை விட அதிகமாக உயர்ந்து இருக்கிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து,  நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்ட நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். 

மேலும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் மக்களின் பாதிப்பை உணர்த்தும் வகையில் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சி தலைவர்கள் மூலமாக குடியரசு தலைவருக்கு அனுப்படும் என  மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு, விஜயகாந்த் கோரிக்கை
பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
2. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆண்டுக்கு ரூ.2,500 கோடி வரை மட்டுமே கிடைக்க வாய்ப்பு - தமிழக அரசு விளக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆண்டுக்கு ரூ.2,500 கோடி வரை மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
3. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
4. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சென்னையில் பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்ந்துள்ளது, டீசல் விலை 5 காசுகள் உயர்ந்துள்ளது.