மாநில செய்திகள்

கொரோனா முன் தடுப்பு முயற்சியில் மக்கள் ஈடுபட வேண்டும் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள் + "||" + People should engage in Corona Prevention Initiative - Request of Vice President Venkaiah Naidu

கொரோனா முன் தடுப்பு முயற்சியில் மக்கள் ஈடுபட வேண்டும் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்

கொரோனா முன் தடுப்பு முயற்சியில் மக்கள் ஈடுபட வேண்டும் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்
கொரோனா தொற்றை பார்த்து பீதியடையாமல், முன்தடுப்பு முயற்சியில் மக்கள் ஈடுபட வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது ‘பேஸ்புக்’கில் (முகநூல்) நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

பெரும்பாலான நாடுகள் பொது முடக்கத்துக்கு முடிவு கட்டி, பொருளாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. பொருளாதாரத்துக்கு ஊக்கம் கொடுக்க அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. ஒவ்வொருவரும், விதிமுறைகளைப் பின்பற்றி, தேவையான தடுப்பு முயற்சிகளை எடுத்து, அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.


முன் எப்போதும் கண்டிராத இந்தச் சுகாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உரிய போராட்டத்தில் மக்கள் ஒற்றுமையாகப் பங்கேற்க வேண்டும். ஆன்மிகம் மற்றும் அறிவியல் மீதான நமது நம்பிக்கையில் தான் நம் நாட்டின் வலிமை அமைந்துள்ளது.

மக்கள் இந்த நிலையில், பீதியடையாமல், முன்தடுப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டும். நமது உண்மையான வாழ்க்கைப் பங்காளி நம் உடல் தான். எனவே, சரியான உணவு வகைகளை உண்பதன் மூலமும், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கான, உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலமும் நம் உடல் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான், நம் உடல், நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் நமக்கு ஒத்துழைப்பு தரும்.

இப்போதைய கட்டுப்பாடுகள், முடக்கப்பட்ட வாழ்க்கை முறை எப்போது முடிவுக்கு வரும்?. நமது இயல்பான வாழ்க்கைக்கு எப்போது நாம் திரும்புவோம்? என்பது போன்ற கேள்விகளுக்கு உறுதியான பதிலை அளிப்பது எளிதான விஷயமாக இருக்காது. பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாத நிச்சயமற்ற நிலை. அதன் காரணமாக ஏற்பட்டுள்ள அழுத்தம் ஆகியவற்றுக்கு இடையே, நாம் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். பெருநகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் அதை வெற்றிகண்டு குணமடைந்துள்ளனர். குறைவான சதவீதம் பேருக்கே மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் பிறந்தநாளையொட்டி, அவரை பாராட்டி நினைவு கூர்ந்து தனது பேஸ்புக் பக்கத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கருத்து பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவையில் மூதாட்டி உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி
கோவையில் கொரோனாவுக்கு மூதாட்டி உள்பட 2 பேர் பலியானார்கள்.
2. தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி
தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். செவிலியர்கள் உள்பட 134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
3. மாவட்டத்தில் 39 பேரின் உயிரை பறித்த கொரோனா; இறுதி கட்டத்தில் சிகிச்சைக்கு வருவதால் பலி எண்ணிக்கை உயர்கிறது
திண்டுக்கல் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அதேநேரம் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
4. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது; கொரோனா பாதிப்பால் முதியவர் சாவு
கொரோனா பாதிப்பால் உடுமலையை சேர்ந்த முதியவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 500 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது
இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டி உள்ளது.