தமிழக கல்விமுறையில் படித்த வெளிமாநில மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்


தமிழக கல்விமுறையில் படித்த வெளிமாநில மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Jun 2020 8:13 PM GMT (Updated: 28 Jun 2020 8:13 PM GMT)

தமிழக கல்விமுறையில் படித்த வெளிமாநில மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

தமிழக பாடத்திட்டத்தின்படி வெளிமாநிலங்களில் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சிநிலை குறித்து அறிவிப்பில் தெளிவுபடுத்தப்படவில்லை. இதனால் மராட்டிய மாநிலம், மும்பையில் தமிழகக்கல்வி முறையில் படிக்கும் 190 மாணவர்கள் தங்கள் தேர்ச்சிநிலை குறித்து தெளிவான உத்தரவுகள் கிடைக்காததால் கவலை கொண்டுள்ளனர்.

தமிழக அரசு 2019-20-ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் படித்த தமிழக மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்ததைப்போல், தமிழக பாடத்திட்டத்தில் படித்த மும்பை மாணவர்கள் 190 பேர் உட்பட, வெளி மாநிலங்களில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து, மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை விரைவில் வெளியிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story