மாநில செய்திகள்

சீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமரின் நிவாரண நிதியம் பணம் பெற்றது, எப்படி நியாயம்? - ப.சிதம்பரம் ‘டுவிட்டர்’ பதிவு + "||" + How did PM Relief Fund money received from Chinese companies? - P. Chidambaram Tweet

சீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமரின் நிவாரண நிதியம் பணம் பெற்றது, எப்படி நியாயம்? - ப.சிதம்பரம் ‘டுவிட்டர்’ பதிவு

சீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமரின் நிவாரண நிதியம் பணம் பெற்றது, எப்படி நியாயம்? - ப.சிதம்பரம் ‘டுவிட்டர்’ பதிவு
சீன நிறுவனங்களிடம் இருந்துபிரதமரின் நிவாரண நிதியம் பணம்பெற்றது, எப்படி நியாயம்? என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
சென்னை,

2005-ம் ஆண்டில் ராஜீவ்காந்தி அறக்கட்டளை ரூ.1 கோடியே 45 லட்சம் நன்கொடை பெற்றது தவறு என்றால், 2020-ம் ஆண்டில் சீன நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக்கட்டுப்பாட்டில் உள்ள ‘பி.எம்.-கேர்ஸ்’(பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்) நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்?.


சீனா எப்போது ஊடுருவியது? 2013, 2014, 2018, 2020-ல் ஊடுருவல் நடைபெற்றது. இந்த ஊடுருவல்களுக்கு பிறகு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் சீன நிறுவனங்களிடம் இருந்து நிதிபெற்றது மாபெரும் குற்றமல்லவா?

2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீன நிறுவனங்கள் நிதி கொடுக்கிறார்கள். அதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீனத்துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு?. சீன அதிபர் ஜீயும், இந்திய பிரதமர் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள், சீனத்துருப்புகள் ஊடுருவிகின்றன! இது எப்படி இருக்கு?.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.