தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 29 Jun 2020 11:04 AM GMT (Updated: 29 Jun 2020 11:04 AM GMT)

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் கோவை, நீலகிரி, தேனி,திண்டுக்கல் , ஈரோடு புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

* சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

* சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . 

* அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டியே இருக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story