சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை: நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது - ப.சிதம்பரம் ‘டுவிட்டர்’ பதிவு


சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை: நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது - ப.சிதம்பரம் ‘டுவிட்டர்’ பதிவு
x
தினத்தந்தி 29 Jun 2020 7:59 PM GMT (Updated: 29 Jun 2020 7:59 PM GMT)

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து, இந்த வழக்கில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சாத்தான்குளம் வியாபாரி, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பை முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடியில் காவல் துறையினர் கைது செய்து காவலில் இருக்கும்போது மரணம் அடைந்த இரண்டு வர்த்தகர்களுக்கு (தந்தை, மகன்) நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கிறது. 1996-ம் ஆண்டில் டி.கே.பாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வகுத்த விதிகளை மத்திய, மாநில காவல் துறைகள் பின்பற்றுவதில்லை என்பதே உண்மை. சி.பி.ஐ விசாரணையைவிட சிறப்புப் புலனாய்வுக்குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து. இருந்தாலும் சி.பி.ஐ. விசாரணையை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story