மாநில செய்திகள்

முழு ஊரடங்கு நீடிக்கும் சென்னை, மதுரை பகுதிகளில் எடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகள் என்ன? - தமிழக அரசு விளக்கம் + "||" + What are the special measures taken in the Chennai and Madurai areas where the entire curfew lasts? - Tamil Nadu Government Description

முழு ஊரடங்கு நீடிக்கும் சென்னை, மதுரை பகுதிகளில் எடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகள் என்ன? - தமிழக அரசு விளக்கம்

முழு ஊரடங்கு நீடிக்கும் சென்னை, மதுரை பகுதிகளில் எடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகள் என்ன? - தமிழக அரசு விளக்கம்
சென்னை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கின்போது என்னென்ன சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை,

சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்த் தொற்றைத் தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. குறிப்பாக, சென்னையில் 15 மண்டலங்களிலும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நோய்த் தொற்று உள்ளவர்களுடன் தொடர்புள்ளவர்களைக் கண்டறியும் பணி மண்டல அளவில் மேற்கொள்ளப்படுகிறது.


அங்கு நோய்த் தடுப்பு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் உள்ள ஏழைகளுக்கு முககவசம், வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர், சத்தான உணவு போன்றவை வழங்கப்படுகிறது. அவர்களின் வாழ்விடம் நெருக்கமாக இருந்தால், அவர்கள் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் விபரம் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர, சென்னையில் உள்ள 149 நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும், 19 மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சோதனை மையம் செயல்படுவதுடன், 4,925 காய்ச்சல் சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, நோய் அறிகுறி உள்ளவர்கள் தீவிரமாக கண்டறியப்பட்டு, சோதனை செய்யப்படுகின்றனர்.

இதனால் 19-ந் தேதி முதல் 3 லட்சத்து 36 ஆயிரத்து 836 பேர் காய்ச்சல் சோதனையில் பங்குகொண்டனர். அவர்களில் 15 ஆயிரத்து 119 நபர்களுக்கு கொரோனா தொற்று சோதனை செய்யப்பட்டது. இவர்களில் 3 ஆயிரத்து 189 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் நோய்த் தொற்று முன்கூட்டியே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால், உயிரிழப்பு தவிர்க்கப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில், நோய்த் தொற்று தீவிரமாக உள்ள பகுதிகளில் உள்ள ஏழைகள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும், கொரோனா நோய்த் தொற்றுடன் ரத்தக் கொதிப்பு, இதய நோய், சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய் போன்ற நோய் உள்ளவர்கள் இந்நோய்த் தொற்றினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.

இப்பகுதியில் வாழும் ஏழைகளின் வாழ்விடங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலையில் அமைந்துள்ளன. எனவே, ஒரு முக்கிய நோய் பரவல் தடுப்புப் பணியாக சென்னை மாநகராட்சியில், குறிப்பாக நெரிசலான குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கையாக வீடுகள் தோறும் தீவிர ஆய்வு செய்து கண்டறிந்து, பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களை தனிமைப்படுத்தும் முகாம்களில் குறைந்தபட்சம் 7 நாட்களாவது தங்க வைத்து, அவர்களை நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்ற ஒரு முக்கிய நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு முன்னெச்சரிக்கையாக 8.072 பேர் தனிமை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னை மாநகராட்சி பகுதிகளில் அவர்களது வாழ்விடத்தில் நோய்ப் பரவல் தடுக்கப்பட்டுள்ளது.

மதுரை பெருநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இதுவரை 931 முகாம்கள் நடத்தப்பட்டு 75 ஆயிரத்து 252 நபர்கள் காய்ச்சல் சோதனையில் பங்குகொண்டனர். இதில் 8,720 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 1,389 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு 0.8 சதவீதம் குறைந்தது
கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு 0.8 சதவீதம் குறைந்துள்ளது என்று பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
2. பயணிகள் கோரிக்கையை ஏற்று இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
பயணிகளின் கோரிக்கையை ஏஎற்று இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
3. ரெயில்வே வாரிய ஒப்புதல் கிடைத்தவுடன் சென்னையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும்: பொது மேலாளர் ஜான் தாமஸ் பேட்டி
சென்னையில் ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு பிறகு மின்சார ரெயில்களை இயக்க முடிவு செய்திருப்பதாக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் பேட்டி அளித்துள்ளார்.
4. பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 காசுகள் உயர்வு
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.85.04 -க்கு விற்பனையாகிறது.
5. 50 சதவீத பயணிகளுடன் பேருந்து இயங்கினாலும் கட்டணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை
50 சதவீத பயணிகளுடன் பேருந்து இயங்கினாலும் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.