பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை


பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும்  இல்லை
x
தினத்தந்தி 30 Jun 2020 2:40 AM GMT (Updated: 2020-06-30T08:10:31+05:30)

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.

சென்னை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் 25 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக எரிபொருள் தேவை கடுமையாக சரிந்ததாலும் கச்சா எண்ணெய் விலை குறைவாலும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி இருந்தது.  

இந்த நிலையில்,  இந்த மாதம்  7ம் தேதி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.  அன்றைய தினம்   சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், 76.07 ரூபாய்க்கும் டீசல், 68.74 ரூபாய்க்கும் விற்பனையானது. அதை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து வந்தது. 

சென்னையில் நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர்  ரூ. 83.63 ரூபாய்க்கு விற்பனையானது. டீசல் லிட்டர்  ஒரு லிட்டர் 77.72 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று, விலையில்  எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. 


Next Story