சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் : போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது- மதுரை ஐகோர்ட் கிளை


சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் : போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது- மதுரை ஐகோர்ட் கிளை
x
தினத்தந்தி 30 Jun 2020 6:02 AM GMT (Updated: 30 Jun 2020 6:02 AM GMT)

சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது என்று மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.

மதுரை,

சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க வந்த தன்னை மிரட்டல் விடுக்கும் வகையில் காவல்துறையினர் பேசியதாக மாஜிஸ்திரேட்டு மதுரை ஐகோர்ட் பதிவாளரிடம் இமெயில் மூலமாக புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்று குற்றவியல் அவமதிப்பு வழக்கு பதிவு செய்த உயர் நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டு கிளை,  புகாருக்கு உள்ளான தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன், சாத்தான்குளம் போலீஸ்காரர் மகாராஜன்  இன்று காலை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. 

இதன்படி, தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன், ஏ.டி.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் ஆகியோர்  விசாரணைக்கு ஆஜர் ஆகினர். அதேபோல்,
நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினவ் ஆஜரானார்.மிரட்டல் புகாருக்கு உள்ளான சாத்தான்குளம் காவலர் மகாராஜனும் நேரில் ஆஜர் ஆனார்.  

இந்த வழக்கு விசாரணையின் போது, “ஜெயராஜ், பெனிக்ஸ் உடலில் அதிக காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. எனவே போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது என்று மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்தது.

Next Story