ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணையை தொடங்க அதிரடி உத்தரவு

ஜெயராஜ் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணையை தொடங்க மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை ஏற்கனவே சிபிஐக்க்கு தமிழக அரசு மாற்றி உத்தரவிட்டுள்ள நிலையில், சிபிசிஐடி உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சி.பி.ஐ. விசாரணை தொடங்குவதற்குள் தடயங்களை அழிக்க வாய்ப்பு இருப்பதால், நெல்லை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அனில்குமார் இன்று விசாரணையை துவக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு, நாகர்கோவில் காசி வழக்குகளை நெல்லை சிபிசிஐடி, எஸ்.பி அனில்குமார் விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story