தமிழகத்தில் இன்று மேலும் 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


தமிழகத்தில் இன்று மேலும் 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 30 Jun 2020 12:31 PM GMT (Updated: 2020-06-30T18:01:38+05:30)

தமிழகத்தில் இன்று மேலும் 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முந்தைய நாள் எண்ணிக்கையை மிஞ்சும் வகையில், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி, தமிழகத்தில் கடந்த 25ம் தேதி முதல் 3,509, 3,645, 3,713, 3940, 3949 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதனால், நேற்று பாதிப்பு எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,141ல் இருந்து 1,201 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. கொரொனா தொற்றில் இருந்து இன்று 2,325 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 2,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 17ந் தேதி, 2,174 என்ற எண்ணிக்கையில் இருந்த பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து, கடந்த 24ந் தேதி 2,866 ஆக உயர்ந்திருந்தது. தொடர்ந்து 8 நாட்களாக 2 ஆயிரத்திற்கு மேல் பாதிப்பு எண்ணிக்கை இருந்தது. இந்த சூழலில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 500க்கு கூடுதலாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story