சென்னை-திருவனந்தபுரம், எர்ணாகுளம் இடையே சிறப்பு பார்சல் ரெயில் சேவை 31-ந்தேதி வரை நீட்டிப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை-திருவனந்தபுரம், எர்ணாகுளம் இடையே சிறப்பு பார்சல் ரெயில் சேவை 31-ந்தேதி வரை நீட்டிப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 1 July 2020 3:15 AM IST (Updated: 1 July 2020 3:11 AM IST)
t-max-icont-min-icon

சென்னை-திருவனந்தபுரம், எர்ணாகுளம் இடையே சிறப்பு பார்சல் ரெயில் சேவை 31-ந்தேதி வரை நீட்டிப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை,

* சென்னை எழும்பூர்-திருவனந்தபுரம் (வண்டி எண்: 00657), திருவனந்தபுரம்-எழும்பூர் (00658) இடையே வாரத்துக்கு 3 முறை இயக்கப்படும் சிறப்பு பார்சல் ரெயில்கள் இம்மாதம் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

* சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல்-எர்ணாகுளம் (00653), எர்ணாகுளம்-எம்.ஜி.ஆர். சென்டிரல் (00654) இடையே வாரத்துக்கு 3 முறை இயக்கப்படும் சிறப்பு பார்சல் ரெயில்கள் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story