மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் போலீசாருக்கு மனநல பயிற்சி - டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு + "||" + Mental health training for policemen across Tamil Nadu - DGP Tripathi's order

தமிழகம் முழுவதும் போலீசாருக்கு மனநல பயிற்சி - டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு

தமிழகம் முழுவதும் போலீசாருக்கு மனநல பயிற்சி - டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு
தமிழகம் முழுவதும் போலீசாருக்கு அறிவுபூர்வமான மனநல பயிற்சி அளிக்க டி.ஜி.பி.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசார் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கி டி.ஜி.பி.திரிபாதி சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மட்ட போலீசாருக்கும் அனுப்பி வைத்தார். அதன்படி தமிழகம் முழுவதும் போலீசாருக்கு அறிவுபூர்வமான மனநல பயிற்சி அளிக்கவும் அவர் ஆணை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.


இதைத்தொடர்ந்து திருச்சி சரக டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன் அதிரடியாக களத்தில் இறங்கி விட்டார். பொதுமக்களிடம் அத்துமீறி நடந்ததாக வந்த புகார்கள் அடிப்படையில் 80 போலீசாரை அடையாளம் கண்டறிந்து, அவர்களுக்கு அறிவுபூர்வமான மனநல சிறப்பு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

கொரோனாவின் அச்சுறுத்தல் போலீஸ்துறையையும் ஆட்டம் காண வைத்துள்ளது. இந்தநிலையில் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள போலீசாரை கண்டறிந்து அவர்களுக்கு ‘கவுன்சிலிங்’ மூலம் பயிற்சி அளிக்க தமிழகம் முழுவதும் உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக டி.ஜி.பி.அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: சென்னை போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்
சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்றிரவு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
2. தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
3. தமிழகம் முழுவதும் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
4. தமிழகம் முழுவதும் நாளை முதல் ஓட்டல்களில் அமர்ந்து உணவு அருந்தலாம் உணவகங்கள் தயாராகின்றன
தமிழகம் முழுவதும் நாளை (8-ந் தேதி) முதல் ஓட்டல்களில் அமர்ந்து உணவு அருந்தலாம். எனவே அதற்கேற்ப உணவகங்கள் தயாராகின்றன.
5. தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளை இயக்குவதில் புதிய உத்தரவு - அரசாணை வெளியீடு
தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளை இயக்குவதில் புதிய உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியீட்ப்பட்டுள்ளது.