கொரோனாவுக்கு சென்னையில் மேலும் 22 பேர் பலி
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மட்டும் 22 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழகத்தில் தலைநகர் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாகக் காணப்படுகிறது. அதேபோல், கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையிலும் தமிழகத்தில் சென்னை தான் முதலிடம் வகிக்கிறது.
சென்னையில் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பால் 42 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை மட்டும் 22 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் தலா 4 பேர் பலியாகியுள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 7 பேர் பலி, தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும் இன்று கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
Related Tags :
Next Story