என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலைய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலைய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
நெய்வேலி,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங் களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதில் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 17 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த 17 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Tags :
Next Story