அதிமுக - டிடிவி தினகரனின் அமமுகவை இணைக்கும் முயற்சி : பா. ஜனதா மறுப்பு


அதிமுக - டிடிவி தினகரனின் அமமுகவை இணைக்கும் முயற்சி : பா. ஜனதா மறுப்பு
x
தினத்தந்தி 1 July 2020 2:40 PM IST (Updated: 1 July 2020 2:40 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுவதை பா. ஜனதா மறுத்து உள்ளது.

புதுடெல்லி

பாஜகவின் ஆவணங்கள் மற்றும் நூலகத் துறையின் ஒருங்கிணைப்பாளரான அசீர்வதம் ஆச்சாரி, ஆகஸ்ட் 14 ஆம் தேதி சசிகலா விடுவிக்கப்படலாம் என்று டுவீட் செய்திருந்தார். இருப்பினும், அவர் மேலதிக தகவல்களை தரவில்லை.ஆனால் இதனை பெங்களூர் சிறை நிர்வாகம் மறுத்தது.

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா ஆகஸ்ட் நடுப்பகுதியில் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாவார் என்றும், அதன் பிறகு  அதிமுக மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவற்றை ஒன்றிணைக்க தேசிய கட்சி முயற்சிக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதனை பா.ஜனதா மறுத்து உள்ளது.

தமிழகத்தின் பொறுப்பை கவனிக்கும் பாஜகவின் பொதுச் செயலாளர் பி.முரளிதர் ராவ், அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரச்சினைகள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. இந்த இணைப்பு என்பது அதிமுக  தொடர்பான விஷயம். எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் தி இந்துவிடம் அவர் கூறி உள்ளார்.



Next Story