என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்து: உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்


என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்து: உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
x
தினத்தந்தி 1 July 2020 5:28 PM IST (Updated: 1 July 2020 5:28 PM IST)
t-max-icont-min-icon

என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யின் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் என்.எல்.சியில், பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் 7 பேரின் குடும்பத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிப்பதாவது:-

நெய்வேலி 2-ஆம் அனல் மின்நிலையத்தில் எதிர்பாராத விதமாக கொதிகலன் வெடித்து ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது. 

இந்த கோர விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டு, காயமடைந்தோர் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டி கொள்வதாகவும் துனை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Next Story