முழு ஊரடங்கின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது - டாஸ்மாக் நி்ர்வாகம்
முழு ஊரடங்கின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று டாஸ்மாக் நி்ர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஊரடங்கை ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஜூலை 5, 12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் எந்த வித தளர்வும் இல்லாமல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முழு ஊரடங்கு அமலாகும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (ஜூலை 5, 12, 19, 26 ஆகிய தேதிகள்) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று டாஸ்மாக் நி்ர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூலை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமையில் தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்க படுவதால் டாஸ்மாக் மதுபான கடைகள் விடுமுறை அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story