சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம்: எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது


சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம்: எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது
x
தினத்தந்தி 1 July 2020 9:34 PM IST (Updated: 1 July 2020 9:34 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி,

சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேர் மரணம் அடைந்தது நாடு முழுக்க விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறையிலேயே மர்ம மரணம் அடைந்தனர்.

லாக்டவுன் நேரத்தில் கடை வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட இவர்கள் மோசமாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை சென்னை ஹைகோர்ட்டின் மதுரை கிளை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை இன்றில் இருந்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இன்று கோவில்பட்டி சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர். இந்த நிலையில் சாத்தான்குளம் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ் உட்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதோடு உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். சாத்தான்குளம் வழக்கில் இது அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வழக்கில் சாத்தான்குளம் எஸ்ஐ ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

Next Story