தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல சுங்கத்துறை முதன்மை கமிஷனர் பொறுப்பேற்பு


தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல சுங்கத்துறை முதன்மை கமிஷனர் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 2 July 2020 12:28 AM IST (Updated: 2 July 2020 12:28 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலசுங்கத்துறை முதன்மை கமிஷனராக ஜி.வி.கிருஷ்ணராவ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை,

சென்னை மண்டலத்தின் சுங்கத்துறையின் தலைமை கமிஷனராக பணியாற்றி வந்த ஸ்ரீ வாச சேஷா கிரி ராவ் பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து வதோதராவில் முதன்மை கமிஷனராக பணியாற்றி வந்த ஜி.வி.கிருஷ்ணராவ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை கமிஷனராக நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் 1987-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஆந்திர பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டமும், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ மற்றும் எல்.எல்.பி. படித்து உள்ளார். விஜயவாடா, குண்டூர், சென்னை, ஐதராபாத், வதோதரா, கவுகாத்தி போன்ற பல்வேறு இடங்களில் சுங்கத்துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி உள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு மைசூரில் முதன்மை கமிஷனராக பணியாற்றிய போது சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) முறையை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளார்.

கடந்த 1998-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2005-ம் ஆண்டு ஜூன் வரை சென்னையில் உள்ள மத்திய கலால் மற்றும் சுங்கத்துறையில் பணியாற்றியதால் சென்னை பிராந்தியத்தில் உள்ள பிரச்சினைகளை நன்கு அறிந்தவர்.

மேற்கண்ட தகவலை சுங்கத்துறை இணை கமிஷனர் டி.சமய முரளி தெரிவித்து உள்ளார்.

Next Story