சாத்தான்குளம் சம்பவம் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று காலை 10.30 மணிக்கு விசாரணை
சாத்தான்குளம் தந்தை- மகன் மரண வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
மதுரை,
சாத்தான்குளம் சம்பவம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று காலை 10 .30 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது. நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் புகழேந்தி அமர்வு, இதனை முதல் வழக்காக வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரிக்க உள்ளது.
இந்த விசாரணையின் போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் ஆவணங்கள், சிபிசிஐடி போலீசார் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அரசு தரப்பு நீதிபதிகளிடம் தெரிவிக்க உள்ளது.
நீதிபதிகளும் சிபிசிஐடியின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்க வாய்ப்பு உள்ளதால், வழக்கு மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story