தமிழகத்தில் இன்று புதிய உச்சம்; ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் இன்று புதிய உச்சம்; ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 2 July 2020 6:39 PM IST (Updated: 2 July 2020 6:39 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து 7வது நாளாக (3,509, 3,645, 3,713, 3940, 3949, 3,943, 3882) கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 500க்கு கூடுதலாக சென்றது. இதனால், நேற்று பாதிப்பு எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று மிக அதிகபட்ச அளவாக ஒரே நாளில் மேலும் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  

மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,264ல் இருந்து 1,321 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார். கொரொனா தொற்றில் இருந்து இன்று 3,095 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 2,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story