செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நிலவரப்படி 291 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது.
சென்னை
சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 62,598 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 5,807 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரேநாளில் 291 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,098- ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 96 பேர் உயிரிழந்து உள்ளனர். சிகிச்சை பெறுவோர் - 2,696 ஆகவும் குணமடைந்தோர்-3,014 ஆகவும் உள்ளனர்.
Related Tags :
Next Story