சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 3 July 2020 3:33 PM IST (Updated: 3 July 2020 3:33 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 

சேலம் மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,034 இருந்தது.

இந்நிலையில் சேலத்தில் இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,134 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும்  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மக்கள் ஒவ்வொருவரும் முக கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story