தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது
தமிழகத்தில் இன்று மேலும் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து 7வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,500க்கு அதிகமான நிலையில், நேற்று பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. இதனால் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்திருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று இரண்டாவது நாளாக அதிகபட்ச அளவாக ஒரே நாளில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,321ல் இருந்து 1,385 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் காரணமாக, இந்தியாவில் 2 வது மாநிலமாக, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இடம் பிடித்துள்ளது.
Related Tags :
Next Story