கொரோனாவுக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பலி
சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை,
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் (வயது 52). இவர் மதுராந்தகம் அரசு மருத்துவமனையின் தலைமை டாக்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் மேல்மருவத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி அவரது உடல் நிலை மோசமானது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக 30-ந்தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரை கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு தொடர்ந்து டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவபணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த டாக் டர் ஒருவரும், மின்ட் சாலை பகுதியை சேர்ந்த டாக்டர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story