மதுரையில் கொரோனோ பாதிப்பு 3,703 ஆக உயர்வு
மதுரையில் ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனோ தொற்று உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 3,703 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை,
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக இலக்காகி உள்ளன. இவற்றில், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் இன்று 280 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனோ பாதித்தோர் எண்ணிக்கை 3,423ல் இருந்து 3,703 ஆக உயர்ந்துள்ளது. 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story