சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
சென்னை முழுவதும் மொத்தமாக 64 ஆயிரத்து 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்றி வெளியான தரவுகளின் படி சென்னை முழுவதும் மொத்தமாக 64 ஆயிரத்து 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்களில் 40 ஆயிரத்து 111 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 23 ஆயிரத்து 581 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்றுவரை 996 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். ஆண்கள் 58.84 சதவீதம் பேரும், பெண்கள் 41.16 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக இராயபுரம் மண்டலத்தில் 2,297 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,586 தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
திருவொற்றியூர் | 1355 | 59 | 1187 |
மணலி | 627 | 12 | 530 |
மாதவரம் | 1131 | 23 | 959 |
தண்டையார்பேட்டை | 5066 | 143 | 1984 |
ராயபுரம் | 6162 | 150 | 2297 |
திருவிக நகர் | 3310 | 104 | 1891 |
அம்பத்தூர் | 1601 | 32 | 1288 |
அண்ணா நகர் | 4578 | 88 | 2431 |
தேனாம்பேட்டை | 4966 | 151 | 2130 |
கோடம்பாக்கம் | 4282 | 88 | 2586 |
வளசரவாக்கம் | 1748 | 32 | 1228 |
ஆலந்தூர் | 734 | 19 | 897 |
அடையாறு | 2157 | 57 | 1793 |
பெருங்குடி | 798 | 19 | 867 |
சோழிங்கநல்லூர் | 759 | 8 | 554 |
இதர மாவட்டம் | 837 | 11 | 959 |
Related Tags :
Next Story