மாநில செய்திகள்

பெருநகர் சென்னை காவல் எல்லைகுட்பட்ட பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு + "||" + Metropolitan Chennai Police announces new restrictions on border areas

பெருநகர் சென்னை காவல் எல்லைகுட்பட்ட பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

பெருநகர் சென்னை காவல் எல்லைகுட்பட்ட பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
பெருநகர் சென்னை காவல் எல்லைகுட்பட்ட பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, 

பெருநகர சென்னை காவல் எல்லைகு உட்பட்ட பகுதிகளில் வரும் திங்கட்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதன்படி சென்னைக்கு சில கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்த அறிவிப்பில், “ சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். 

டீக்கடைகள் காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரையில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். உணவகங்கள் காலை 6 மணி முஇரவு 9 மணி வரையில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காலை 6 மணி வரை இரவு 8 மணி வரை இயங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொலைபேசியில் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு இரவு 9 மணி வரை அனுமதி அளிக்கப்படும் என்றும், வணிக வளாகங்கள் தவிர அனைத்து ஷோரூம்கள், ஜவுளி, நகைக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மறு உத்தரவு வரும் வரை கட்டுப்பாடுகள் நீடிக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் தேர்வுகள்...