மாநில செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது + "||" + Maharashtra Coronavirus Cases Cross 2 Lakh-Mark, 7,074 New Cases Today

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது
மராட்டிய மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக நோய் பரவல் வேகம் தீவிரமடைந்து உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஒரேநாளில் புதிதாக 7,074 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,00,064 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல மராட்டியத்தில் இன்று 295 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 671 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 3,395 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,08,082 ஆக உயர்ந்துள்ளது. 83,295 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 10,221 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 10,221 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
2. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியது
ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 8 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
3. மராட்டியத்தில் கொரோனா பாதித்த போலீசார் எண்ணிக்கை 9,566 ஆக உயர்வு
மராட்டியத்தில் கொரோனா பாதித்த போலீசார் எண்ணிக்கை 9,566 ஆக உள்ளது என்று அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
4. மராட்டியத்தில் 10-வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது
மராட்டியத்தில் 10-வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது.
5. மராட்டியத்தில் மேலும் 101 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் மேலும் 101 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.