நாளை முதல் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல்


நாளை முதல் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல்
x
தினத்தந்தி 5 July 2020 4:15 AM IST (Updated: 5 July 2020 4:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் நாளை முதல் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் இந்த மாதத்தில் உள்ள 5 (இன்று), 12, 19, 26 தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகள்) தளர்வற்ற முழுஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களும் இன்று (நேற்று) நள்ளிரவு 12 மணி முதல் நாளை(இன்று) நள்ளிரவு 12 மணி வரை பெட்ரோல், டீசல் விற்பனையில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றது.

தமிழக அரசு அறிவித்துள்ளபடி அவசர தேவைகளுக்காகவும், அத்தியாவசிய தேவைகளுக்காகவும் (ஆம்புலன்ஸ், பால் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை) பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் குறைந்த எண்ணிக்கையிலான விற்பனையாளர்களை கொண்டு இயங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் 6-ந்தேதி (நாளை) முதல் தமிழகத்தின் அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களுக்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் முககவசம் கட்டாயமாக அணிந்து வரவேண்டும் என்றும், முககவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story