மதுரையில் 4 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு


மதுரையில் 4 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 5 July 2020 9:20 AM IST (Updated: 5 July 2020 9:20 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக இலக்காகி உள்ளன.  இவற்றில், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்  உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

மதுரை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,776 ஆக இருந்தது.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் இன்று 315 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனோ பாதித்தோர் எண்ணிக்கை 4,091 ஆக உயர்ந்துள்ளது.  57 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை 994பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து மதுரையில் வருகின்ற 12 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Next Story