தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்


Representative image
x
Representative image
தினத்தந்தி 5 July 2020 4:57 AM GMT (Updated: 5 July 2020 4:57 AM GMT)

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விழிப்புணர்வுகளை மேற்கொண்டு, அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை. ஊரடங்கு விதித்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த சில வாரங்களில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

முழு ஊரடங்கையொட்டி சென்னையில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 15 ஆயிரம் போலீசார் பல இடங்களில் குழுக்களாக பிரிந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தேவையின்றி சாலைகளில் சுற்றுபவர்களை போலீசார்  எச்சரித்து அனுப்பி வருகின்றனர். இதனால், சென்னையில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களிலும் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Next Story