தென்கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தது


தென்கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தது
x
தினத்தந்தி 5 July 2020 4:50 PM IST (Updated: 5 July 2020 4:50 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் வகையில் தென்கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் படுக்கை வசதிகளையும், பரிசோதனை கருவிகளையும் அமைத்துக்கொள்ள தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் மேலும் 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகளை வாங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் வகையில் தென்கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது. 

புதிதாக கருவிகள் வந்திருப்பதால் பரிசோதனைகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 5.6 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ளன.

முன்னதாக சோதனையை அதிகரிக்க 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க தென்கொரியாவிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கொரோனா பரிசோதனையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருப்பதாக அரசு தொடர்ச்சியாக தெரிவித்து வரும் நிலையில், தற்போது மேலும் 1 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Next Story