சூரிய சக்தி யோகாவை இலவசமாக கற்றுக்கொடுக்க திட்டம் - ஜக்கி வாசுதேவ்
அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களிலும் சூரிய சக்தி யோகாவை இலவசமாக கற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளதாக ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பவுர்ணமியையொட்டி தமிழ் சத்சங்கம் சார்பிலான விழா நேற்று ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இந்த விழாவில் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:-
கொரோனா வைரஸ் அனைவருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் யோகா அவசியம். வைரஸ் வந்துவிட்டால், ‘என் உடலில் இருந்து மற்ற உடல்களுக்கு அதுபோக கூடாது’ என்ற ஒரு உறுதியை குருபவுர்ணமி நாளில் அனைவரும் எடுத்து கொள்ள வேண்டும்.
தமிழர்கள் அனைவரும் இந்த உறுதிமொழியை ஏற்றால் பிற மாநிலங்களைவிட தமிழகம் கொரோனா பாதிப்பில் இருந்து முதலில் மீண்டு வரமுடியும். ஈஷா யோகா மையம் உலகின் மிக முக்கியமான யோகா மையமாக மாறி உள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்சினை முடிந்த உடன் தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களிலும் சூரிய சக்தி என்ற எளிமையான யோகாவை இலவசமாக கற்றுக் கொடுக்க திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story