கைதிகளால் தாக்கப்பட்டனரா? 5 போலீசார் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்கள்
சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 5 போலீசார் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டது ஏன்? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தூத்துக்குடி,
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.
இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன், போலீஸ்காரர் முத்துராஜ் ஆகிய 5 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.
கைதான 5 பேரையும் தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இந்த சிறையில் 130 ஆண் கைதிகள், 35 பெண் கைதிகள், 35 வளர் இளம்பெண்கள் ஆகியோரை அடைக்கும் வசதி உள்ளது. இங்கு 40 சிறை காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். எனினும் தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 58 பேர் மட்டுமே சிறையில் உள்ளனர்.
இந்த சிறையில் அறைகள் 4 பிளாக்குகளாக உள்ளன. ஒவ்வொரு பிளாக்குக்கும் இடையே 20 அடி உயர தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஒரு அறையிலும், சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேரும் மற்றொரு அறையிலும், ஏட்டு முருகன், போலீஸ்காரர் முத்துராஜ் ஆகியோர் இன்னொரு அறையிலும் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த பிளாக்கில் ஒரு உதவி சிறை வார்டன் தலைமையில், 5 பேர் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஜெயிலில் ஏற்கனவே அடைக்கப்பட்டு இருந்த கைதிகள் 30 பேர் திரண்டு வந்து 5 போலீசாரையும் தாக்கியதாக தகவல்கள் வெளியாகின.
அதேபோன்று இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அரசியல் பின்னணியை கூறி, சிறையில் அதிகாரம் செலுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ஆனால், ஜெயிலில் எந்தவித மோதலும் நடந்ததாக, போலீசில் புகார்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.
இதேபோன்று சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் கடந்த 3-ந்தேதி இரவு 7 மணி அளவில் பேரூரணி சிறைக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது, அவரிடம் அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் எழுத்துப்பூர்வமாக மனு வழங்கி உள்ளார்.
அதில், தனக்கு ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருப்பதாகவும், இந்த சிறையில் வெளியில் இருந்து அவ்வப்போது டாக்டர்கள் வந்து செல்கின்றனர். எனக்கு மருத்துவ வசதி தேவையாக உள்ளது. ஆகையால் தன்னை மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
அதனை பரிசீலித்த சிறைத்துறை நிர்வாகம், கொரோனா காலத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அதிக அளவில் விசாரணை நடப்பதால், அந்த வசதி கொண்ட மதுரை மத்திய சிறைக்கு மாற்ற முடிவு செய்தது. அதன்படி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 பேரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறியதாவது:-
பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது 100 சதவீதம் பொய். எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, அதுபோன்ற எந்த சம்பவமும் நடைபெறவில்லை.
கைது செய்யப்பட்ட போலீசாரின் வேண்டுகோளின்படி, அவர்கள் 5 பேரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இதில் வேறு எந்த காரணமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story