நவம்பர் மாதம் வரை ரேசன் கடைகளில் இலவச அரிசி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு


நவம்பர் மாதம் வரை ரேசன் கடைகளில் இலவச அரிசி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 6 July 2020 2:18 PM IST (Updated: 6 July 2020 2:18 PM IST)
t-max-icont-min-icon

ரேசன் கடைகளில் நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் ரேசன் கடைகளில் ஜூலை மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது நவம்பர் மாதம் வரை அரிசி அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க உத்தரவி பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“ஏப்ரல், மே, ஜூன்,  ஜூலை மாதங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவின் படி நவம்பர் மாதம் வரை  ரேசனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும்.

ஏற்கனவே அதிகபட்சமாக 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 5 கிலோ இலவசமாக வழங்கப்படும்.

ஜூலை 1 முதல் 3 வரை பணம் கொடுத்து பொருள் பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் ஈடு செய்யப்படும். பணம் கொடுத்து வாங்கியவர்களுக்கு பணம் திருப்பி தரப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story