மேற்கு வங்காள அரசு தடையால் சென்னை-கொல்கத்தா விமான சேவை 19-ந் தேதி வரை ரத்து
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் வெளிநாட்டு விமான சேவைகளுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
ஆலந்தூர்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் வெளிநாட்டு விமான சேவைகளுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் 25-ந் தேதி முதல் இந்தியா முழுவதும் உள்நாட்டு விமான சேவை மட்டும் தொடங்கி நடந்து வருகிறது. மும்பை போன்ற சில இடங்களுக்கு சென்னையில் இருந்து இன்னும் விமான சேவை தொடங்கப்படவில்லை.
சென்னையில் இருந்து தினமும் கொல்கத்தாவுக்கு காலை 7.35 மணி, மதியம் 2.05, மாலை 6.10, 6.20, இரவு 10.05 மணி ஆகிய நேரங்களில் 5 விமானங்கள் செல்லும். அதேபோல் கொல்கத்தாவில் இருந்து பகல் 1 மணி, மாலை 5.15, 5.25 இரவு 8.50, 11.40 ஆகிய நேரங்களில் 5 விமானங்கள் சென்னைக்கு வந்து சேரும். இந்த விமானங்களில் தினமும் 750 பேர் வரை பயணம் செய்து கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள சென்னை, டெல்லி, மும்பை, நாக்பூர், ஆமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து விமானங்கள் வர மேற்கு வங்காள மாநில அரசு தடை விதித்து உள்ளது. இதனால் இந்த 10 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு வருகிற 19-ந் தேதி வரை விமானங்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே 19-ந் தேதி வரை கொல்கத்தா செல்ல விமான டிக்கெட் எடுத்த பயணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அந்த விமான டிக்கெட்டை பயன்படுத்தி கொள்ளலாம் என விமான நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.

Related Tags :
Next Story