4 மாத மின்சார பயன்பாடு மொத்தமாக கணக்கீடு மின்சார கழகத்துக்கு ரூ.900 கோடி கூடுதல் வருவாய் ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்
4 மாத மின்சார பயன்பாட்டு அளவை மொத்தமாக கணக்கிடுவதால், மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்துக்கு சுமார் ரூ.900 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கிறது என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வாதிட்டார்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.எல்.ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொரோனா ஊரடங்கில் மின்சார கட்டணத்தை கணக்கிட்டதில், வழக்கத்தை விட அதிக தொகை வந்துள்ளது. மின்சார ஊழியர்கள் 4 மாதங்களுக்கான மின்கட்டணத்தை மொத்தமாக கணக்கிட்டதால் இந்த நிலை வந்துள்ளது. எனவே, 2 மாதங்களாக பிரித்து கணக்கிட உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கிற்கு ஏற்கனவே மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில் சட்டப்படி மின் பயன்பாட்டு அளவை கணக்கிட்டுள்ளதாக கூறியிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் கபிலன் மனோகரன், ‘மார்ச் மாதம் கடைசி வாரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனால், முந்தைய மாதம் எவ்வளவு மின் கட்டணம் செலுத்தப்பட்டதோ?, அந்த தொகையை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முந்தைய மாதம் செலுத்திய கட்டணத்தை மக்கள் செலுத்தினர். தற்போது, மின்சார ஊழியர்கள் 4 மாதங்களுக்கு மொத்தமாக மின்சார பயன்பாட்டு அளவை கணக்கிட்டு, அதில் 2 மாதங்களுக்கான பயன்பாடு சமமமாக பிரிக்கப்பட்டு, ஏற்கனவே செலுத்திய தொகையை கழித்துக் கொண்டு மீதி தொகையை வசூலிக்கின்றனர்.
இதனால், வழக்கமாக செலுத்தப்பட்டு வந்த மின் கட்டணத்தை விட சுமார் 12 முதல் 50 சதவீதம் வரை கூடுதல் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்துகின்றனர். இதனால், மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிரமானக்கழகம் வழக்கத்தை விட சுமார் ரூ.900 கோடி கூடுதல் உபரி வருவாய் பெறுகிறது. எனவே, இந்த முறை கணக்கிடுவதை ரத்து செய்யவேண்டும்’ என்று வாதிட்டார்.
இதற்கு மின்சார கழகம் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஊரடங்கினால், அனைவரும் வீட்டில் இருந்ததால் மின்சார பயன்பாட்டு அளவு அதிகரித்துள்ளது. அதனால் மின் கட்டண தொகையும் அதிகரித்துள்ளது. மின்சார கழகம் சரியான முறையில் தான் கணக்கிட்டுள்ளது. இதுகுறித்து எழுத்துப்பூர்வமான விளக்கத்தை தாக்கல்
செய்ய கால அவகாசம் வேண்டும்‘ என்றார். இதை ஏற்றுக் கொண்டு வழக்கை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related Tags :
Next Story