டீசல் விலை உயர்வு, பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை
சென்னையில் 7 நாட்களுக்கு பிறகு டீசல் விலை .19 காசுகள் உயர்ந்துள்ளது.
சென்னை,
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணையித்துக் கொள்கின்றன. கொரோனா ஊரடங்கால் எரிபொருள் தேவை கணிசமாகக் குறைந்ததால், ஆரம்ப கட்ட ஊரடங்கின் போது விலை ஏற்றம் இதுவும் இன்றி இருந்தது.
பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயரத்தொடங்கியது. சென்னையில் கடந்த ஜூன் 29ம் தேதி நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல், 83.63 ரூபாய்க்கு விற்பனையானது. டீசல் ஒரு லிட்டர், 77.72 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
கடந்த ஒரு வாரமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி விற்பனையானது. இந்த நிலையில், 7 நாட்களுக்கு பிறகு டீசல் 19 காசுகள் உயர்ந்துள்ளது. 77.91-க்கு விற்பனையாகிறது. 8-வது நாளாக இன்றும், பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

Related Tags :
Next Story