மாநில செய்திகள்

திருச்சி அதவத்தூரில் மரணமடைந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை- பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல் + "||" + Girl who died in Adivathur in Trichy not sexually abused

திருச்சி அதவத்தூரில் மரணமடைந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை- பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

திருச்சி அதவத்தூரில் மரணமடைந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை- பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்
திருச்சி அதவத்தூரில் மரணமடைந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி,

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவருடைய மகள் கங்காதேவி (வயது 14). எட்டரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில், அந்த மாணவி நேற்று மதியம் 12 மணியளவில் சக தோழிகளுடன் விளையாடினாள்.  பின்னர் வீட்டுக்கு சென்ற அவள், வீட்டில் உள்ள குப்பைகளை எடுத்துக்கொண்டு முள்காட்டில் கொட்ட சென்றாள். அதன்பிறகு மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவளை பல்வேறு இடங்களில் தேடினர்.

அப்போது குப்பை கொட்டச் சென்ற முள்காடு பகுதியில் சிறுமி, உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தாள்.இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 11 தனிப்படைகள் அமைத்து  தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில்,  சிறுமியின் உடல் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது . பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் உடலை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்று பிரதே பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.   இதையடுத்து,  சிறுமி கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் பயங்கரம்: 1 பவுன் நகைக்காக மூதாட்டி படுகொலை
திருச்சியில் 1 பவுன் நகைக்காக மூதாட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
2. திருச்சி மத்திய மண்டலத்தில் 476 புதிய ரவுடிகள் - ஐ.ஜி. ஜெயராம் தகவல்
திருச்சி மத்திய மண்டலத்தில் 476 புதிய ரவுடிகள் உள்ளதாக தெரியவந்ததை தொடர்ந்து அவர்களுக்காக சரித்திர பதிவேடு துவங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
3. திருச்சி அருகே இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல் அடக்கம்
திருச்சி அருகே சீராத்தோப்பில் இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
4. பெரியார் சிலை அவமதிப்பு: சமுக விரோதிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஓ.பன்னீர் செல்வம்
திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான, சமுக விரோதிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
5. திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் - மு.க.ஸ்டாலின்
திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.