மோட்டார் வாகன வரி விலக்கு கோரிய வழக்கு ஊரடங்கில் லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படவில்லை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு
ஊரடங்கில் லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படவில்லை. எனவே மோட்டார் வாகன வரி விலக்கு கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்து உள்ளது.
சென்னை,
தமிழ்நாடு லாரி உரிமையாளர் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் பொதுமக்கள் வருமானம் இழந்து, கடும் சிரமத்தில் உள்ளனர். அதனால் வாடகை சரக்கு வாகனங்களுக்கு வருகிற செப்டம்பர் 30-ந்தேதி வரை மோட்டார் வாகன வரி விலக்கு அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதன்படி போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் சார்பில் உள்துறை (போக்குவரத்து) துணை செயலாளர் எம்.ராமச்சந்திரன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சரக்கு வாகனங்களுக்கு, மோட்டார் வாகன வரி செலுத்த ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் அளித்து கடந்த மே 14-ந்தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை லாரிகளுக்கு மோட்டார் வாகன வரி செலுத்த விலக்கு அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஊடரங்கினால் லாரி தொழிலுக்கு பாதிப்பு இல்லை. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்ல லாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மோட்டார் வாகன ஓட்டுனர் உரிமம், வாகன பெர்மிட் உரிமம், வாகன தகுதிச் சான்றிதழ் ஆகியவை ஊரடங்கினால் புதுப்பிக்க முடியாமல் காலவதியாகி விட்டால், அவை எல்லாம் வருகிற செப்டம்பர் 30-ந்தேதி வரை செல்லத்தக்கதாக கருதும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ், மேக்சி கேப்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வரி செலுத்த ஜூன் 30-ந்தேதி வரை ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. மனுதாரர் கோருவது போல, வருகிற செப்டம்பர் 30-ந்தேதி மோட்டார் வாகன வரி செலுத்த விலக்கு அளித்தால், அரசுக்கு சுமார் ரூ.1,724 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். ஊரடங்கு காலத்தில் லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு எதுவும் ஏற்படவில்லை. லாரிகள் இயக்கப்பட்டது. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Tags :
Next Story