அலுவலக பணி மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு விலக்கு - அரசாணை வெளியீடு
அலுவலக பணி மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:
கொரோனா நோய் தொற்றை தவிர்க்க, அரசுத் துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அலுவலகப் பணியை மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் பலமுறை அரசை கேட்டுக் கொண்டு வருகிறார். அவரது கோரிக்கையை ஏற்று, அவர்கள் தங்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து அரசு ஆணையிட்டு வருகிறது.
இந்தநிலையில், தற்போது தடை உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நாட்களிலும் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள், அலுவலக பணி மேற்கொள்ள விலக்கு அளிக்க வேண்டும் என்று இயக்குநர் கோரியுள்ளார். அவரது கோரிக்கையை பரிசீலித்த அரசு, மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களின் உடல் குறைபாட்டையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள 1-ந் தேதி முதல் 15-ந் தேதிவரை மட்டும் அரசு அலுவலகப் பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளித்து அரசு உத்தரவிடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story